குனியமுத்துார் அருகே டீ.டி.சி.பி., அனுமதி பெற்ற 4 சென்ட் இடத்தை என்ன விலைக்கு வாங்கலாம்?
கோவை-அத்திபாளையம் பிரிவு, பழைய ஓம் பராசக்தி மில் பின்புறம் 'கேட்டெட் கம்யூனிட்டி'யில், 1,400 சதுரடி அபார்ட்மென்ட் மூன்று ஆண்டுகள் பழமையான, 3 பி.எச்.கே., யு.எஸ்.டி., என, 800 சதுரடி விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.
- சித்திக், கணபதி.
இடமானது ஏற்கனவே பராசக்தி(என்.டி.சி.,) மில்லாக இருந்தது. பின்னர் இந்திய விமானப்படை பணியாளர்களுக்காக, பலமாடி கட்டடமாக மாற்றப்பட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக வெகுபாதுகாப்பான குடியிருப்பு பகுதியாக விளங்குகிறது. அதன் பின்புறம் கேட்டெட் கம்யூனிட்டி என்பதும் சிறப்புதான்.
எப்படி பார்த்தாலும், 'சூப்பர் பில்டப் ஏரியா' கணக்கில் சதுரடிக்கு ரூ.6,000க்கு மேல் ரூ.6,500 வரை தரலாம். அந்த கேட்டெட் கம்யூனிட்டி என்பது, அதிக பணம் படைத்த மக்கள் குடியிருந்து, நல்ல சங்கம், குடியிருப்புகளிடையே நல்லிணக்கம், நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக் அறை, சங்க அறை, விளையாட்டு மைதானம் என, அனைத்து சவுகரியங்களையும் உள்ளடக்கி இருக்குமே என்றால், கூடுதலாக சதுரடிக்கு ரூ.500லிருந்து ரூ.1,000 வரை கொடுக்கலாம்.
கோவை-பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார்-இடையர்பாளையம் இடையே, 2 கி.மீ., உட்புறமாக டீ.டி.சி.பி., அனுமதி பெற்ற, 4 சென்ட் இடம் மற்றும் தரைதளம் முதல் தளம் தலா, 1,000 சதுரடி புதிய வீடு, என்ன விலைக்கு வாங்கலாம்.
-மலர்விழி, குனியமுத்துார்.
இந்த இடம், ரெசிடென்சி ஏரியா மற்றும் பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து, கோவைப்புதுார் டவுனுக்கு செல்லும் வழியின் இடையே உள்ளது. இதற்கு கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் பார்த்தால் இதன் மதிப்பு ரூ.90 லட்சம்.
கோவை மாநகராட்சி, சாய்பாபாகாலனி சர்ச் ரோட்டிற்கு பின்புறம் பாலாஜி நகரில், 5 சென்ட் இடமானது டீ.டி.சி.பி., அனுமதி, தரைதளம் மற்றும் முதல் தளம் தலா, 1,500 சதுரடியுடன், சிறுவாணி தண்ணீர், போர்வெல் உள்ளடக்கிய வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.
-சந்தானகிருஷ்ணன், கோவை.
தாங்கள் கூறியுள்ள இடமானது, என்.எஸ்.ஆர்., ரோட்டில் இருந்து எவ்வளவு உள்ளே என்ற தகவல் இல்லை. ரோட்டின் அகலம் குறிப்பிடப்படவில்லை. ரோட்டின் அகலம், மிக முக்கியமான ஒரு அளவுகோல். 30 அடி என வைத்துக்கொண்டாலும், சென்ட் ரூ.30 லட்சம் என வைத்துக்கொண்டாலும், 3,000 சதுரடி கட்டுமானத்திற்கு ரூ.50 லட்சம் என எடுத்துக்கொண்டாலும், மொத்தம் ரூ.2 கோடிக்கு போகலாம். விலை முடிப்பதற்கு முன் கீழ், மேல் என, இரண்டு போர்ஷன் சேர்த்து ரூ.50 ஆயிரம் வாடகை வருகிறதா என பார்க்கலாம்.
நான் எனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து, 2,000ம் ஆண்டு சுமார் ஒரு ஏக்கர் பூமியை லே-அவுட்டாக பிரிப்பதற்கு, சூலுார் அப்பநாயக்கன்பட்டியில் வாங்கினோம். எங்களில் ஒருவர் அவசர தேவைக்கென பணம் வாங்கி, விலகி விட்டார். தற்போது, அவர் இறந்துவிட்ட நிலையில் அவரின் வாரிசுகள், கையெழுத்திட பணம் கேட்கின்றனர். இதை எவ்வாறு எதிர்கொள்வது எனக்கூறவும்.
-ராமசாமி, சூலுார்.
உங்களின் காலம் சென்ற பங்குதாரருக்கு, செட்டில்மென்ட் செய்த பணத்தை காசோலை, வரைவோலை, வங்கி பரிமாற்றம் என ஏதேனும் பரிவர்த்தனை வாயிலாக கொடுத்து இருந்தால், அந்த விவரங்களை அவரின் வாரிசுகளுக்கு காண்பித்து, கணக்கு தீர்ந்துவிட்டது எனச்சொல்லி முடிவுக்கு கொண்டுவரலாம்.
ஒருவேளை பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கு சாட்சிகள் யாரும் இல்லை எனும்பொழுதும், வாரிசுதாரர்களை உரிய பஞ்சாயத்தார்கள் மூலம், சமாதானம் செய்வதை தவிர வேறு வழியிருப்பதாக தெரியவில்லை.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.
மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது