9,970 ரயில் ஓட்டுநர்களை தேர்வு செய்கிறது ரயில்வே

சென்னை : ரயில்வேயில் நாடு முழுதும், 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில், 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல் கட்டமாக, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பிரிவு பணியிடங்களை நிரப்ப, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுதும் 9,970 உதவி ஓட்டுநர் பயணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, ரயில்வே கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில், 1,461, தெற்கு மத்திய ரயில்வேயில், 989, மேற்கு ரயில்வேயில், 885, தெற்கு கிழக்கு ரயில்வேயில், 796, கிழக்கு ரயில்வேயில்,768 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில், 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ., டிப்ளமா, பி.இ., - பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமா, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வரும் ஏப்ரல், 10 முதல் விண்ணப்பிக்கலாம். மே 9ம் தேதி கடைசி நாள். அனைத்து ஆர்.ஆர்.பி., இணையதளங்களிலும், இதற்கான முழு தகவலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





மேலும்
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு 17,629 பேரில் 2,295 பேர் மட்டுமே தேர்வு
-
கவுரவிப்பு விழா: நாளை நடக்குது
-
பாறை உடைக்க பயன்படுத்திய 'குப்பெட்டா' பறிமுதல்
-
யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை விசாரணை
-
போதை மருந்து பயன்படுத்திய ஒன்பது பேருக்கு எச்.ஐ.வி., மாநில எல்லையில் உள்ள மக்கள் அதிர்ச்சி
-
சாலையில் முகாமிடும் கால்நடைகள் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு