கவுரவிப்பு விழா: நாளை நடக்குது

பாலக்காடு: மத்திய அரசு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது பொது விவகாரப் பிரிவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது.

அவரும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ஹரீஷ் வைத்தியநாத சங்கரும், நூறணி கிராம சமூகம், கேரளா பிராமண சபை மற்றும் பிராமண கல்வி சங்கம் சார்பில் கவுரவிக்கப்படுகின்றனர்.

பாலக்காடு நூறணி சாரதா கல்யாண மண்டபத்தில், நாளை, 29ம் தேதி காலை 11:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement