பாறை உடைக்க பயன்படுத்திய 'குப்பெட்டா' பறிமுதல்

கோத்தகிரி: கோத்தகிரியில் அனுமதி இல்லாமல் பாறை உடைக்க பயன்படுத்திய 'குப்பெட்டா' பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி டானிங்டன் பகுதியில், எவ்வித அனுமதி பெறாமல், மினி பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்தி, சில நாட்களாக விவசாய நிலத்தை சமன் செய்து, பாறைகள் உடைக்கப்பட்டது.

புகாரின் பேரில், வருவாய் துறை சார்பில், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பணியை நிறுத்தினர்.

எனினும் மீண்டும் பணி நடந்தது. இது குறித்து வருவாய் துறை சார்பில், பிரேமா என்பவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா உத்தரவுப்படி, அனுமதி இல்லாமல் பாறை உடைக்கும் பணிக்கு பயன்படுத்திய, 'குப்பெட்டா' மற்றும் கிரேன் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது.

Advertisement