யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

19


சென்னை: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம் என நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.


நிருபர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே?


துரைமுருகன்: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம். யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சரி தானா, புரிந்ததா?


நிருபர்: எடப்பாடி டில்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்துள்ளாரே?

பதில்: ' யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதான் சொல்லிவிட்டேன். யார் யாருடன் போனாலும் நமக்கு என்ன?' என துரைமுருகன் பதில் அளித்தார்.

Advertisement