தேவிட்டினம் கடற்கரையில் 92 கிலோ கடல் அட்டை பைபர் படகுடன் பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தேவிப்பட்டினம் கடற்கரையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 92 கிலோ கடல் அட்டையை பைபர் படகுடன் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொண்டி சுங்கத்துறைக்கு தேவிபட்டினம் கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை விற்பனை செய்யப்படவுள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது பைபர் படகில் 92 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டை இருந்தது. இதனை விற்பனைக்காக கொண்டு வந்த சிறார் ஒருவரை பிடித்தனர். கடல்அட்டை, பைபர் படகுடன் பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடல் அட்டையை வாங்க வந்த நபர் சுங்கத்துறையினரை பார்த்தவுடன் தனது இரு சக்கர வாகனத்தை விட்டு, விட்டு தப்பி ஓடினார். இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிய சுங்கத்துறையினர் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.4 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
குஜராத் அணி பேட்டிங்; மும்பை அணியில் இரு மாற்றம்
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி: உறுதி அளித்தார் பிரியங்கா
-
பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்
-
லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை