6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

3


பத்ராச்சலம்: தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம் பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம் மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர்.

கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement