டேபிள் டென்னிஸ்: அனிர்பன் தகுதி

சென்னை: 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் பிரதான சுற்றுக்கு இந்தியாவின் அனிர்பன் கோஷ், திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா தகுதி பெற்றனர்.
சென்னையில், 'டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் அனிர்பன் கோஷ், இத்தாலியின் கார்லோ ரோஸி மோதினர். அபாரமாக ஆடிய அனிர்பன் 3-0 (14-12, 11-7, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா 3-1 (11-6, 11-6, 6-11, 11-6) என சகவீரர் முதித் டேனியை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் காவ்யா பாட் 3-2 (11-5, 11-6, 4-11, 12-14, 11-7) என சகவீராங்கனை மானுஸ்ரீ பாட்டீலை தோற்கடித்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் கரிமா கோயல், அவானி திரிபாதி, அஞ்சலி ரோஹில்லா, அனன்யா சாந்தே, திவ்யான்ஷி போவ்மிக் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றனர்.