இரு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
சென்னை: இரண்டு விரைவு ரயில்கள், தலா ஒரு ரயில் நிலையத்தில், கூடுதலாக நின்று செல்லும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பயணியர் நலனை கருத்தில் வைத்து, எழும்பூர் - திருச்செந்துார் ரயில் பூதலுாரிலும், தாம்பரம் - செங்கோட்டை ரயில் சிதம்பரத்திலும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என, கடந்த பிப்., 19ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தீர்கள்.
அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, இரு விரைவு ரயில்களுக்கும், கூடுதல் நிறுத்தம் வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement