விதி மீறி நெல் இயந்திரம் பயன்படுத்திய குடோன் பொறுப்பாளர், காவலாளி மாற்றம்


விதி மீறி நெல் இயந்திரம் பயன்படுத்திய குடோன் பொறுப்பாளர், காவலாளி மாற்றம்


ஆத்துார்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் நெல் கொள்முதல் மையம் உள்ளது.
அங்குள்ள நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை த.மா.கா.,வை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், அவரது பெட்ரோல் பங்க்குக்கு எடுத்துச்சென்று பணியில் ஈடுபட்டார். இதுகுறித்த புகார்படி, ஆத்துார் வாணிப கழக கிடங்கு மேலாளர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் விசாரித்தனர்.
இதையடுத்து கிடங்கு பொறுப்பாளர் தர்மனை, வரகூர் நெல் கொள்முதல் மையத்துக்கும், காவலாளி பூவரசனை, ஒதியத்துார் மையத்துக்கும் இடமாற்றம் செய்தனர். மூட்டை துாக்கும் தொழிலாளர் ஒன்பது பேரை பணி நீக்கம் செய்து, சேலம் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் துரைசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து வாணிப கழக அலுவலர்கள் கூறுகையில், 'இயந்திரம் பயன்படுத்தியது தொடர்பாக, முன்னாள் தலைவரிடம் விசாரிக்க, கலெக்டர் பிருந்தாதேவியிடம், விசாரணை அறிக்கை உள்ளிட்ட விபரம் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement