ரேஷன் பொருள் கடத்தல் தடுக்கதமிழக - கர்நாடக அதிகாரிகள் கூட்டாய்வு
ரேஷன் பொருள் கடத்தல் தடுக்கதமிழக - கர்நாடக அதிகாரிகள் கூட்டாய்வு
ஈரோடு:ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா அலுவலகத்தில், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சார்பில், தமிழக - கர்நாடகா மாநில அதிகாரிகள் கூட்டாய்வு கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்தார். தமிழகத்தில் இருந்து, அதிகளவில் ரேஷன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கர்நாடகத்துக்கு கடத்தப்படுகிறது. ரேஷன் உணவு பொருட்கள் பதுக்கியும் வைக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் இரு மாநில அதிகாரிகள் யோசனைகளை பகிர்ந்து கொண்டனர். சோதனை சாவடிகள், வாகன தணிக்கையை அதிகரிக்க யோசனை தெரிவித்தனர். தமிழக, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வருவாய் துறை, போலீஸ், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement