பெண் குழந்தைகள் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண் குழந்தைகள் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஈரோடு:ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளி கல்வித்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவில் குழு அமைத்துள்ளனர்.
அக்குழு சார்பில் நம்பியூர் யூனியனில் உள்ள, 6 முதல், 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு நம்பியூர் குமுதா கல்வியியல் கல்லுாரியிலும், தாளவாடி யூனியனில் உள்ள மாணவியருக்கு டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், அறிவியல் செயல் விளக்க முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தை தவிர்த்தல், தடுத்தல், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, உயர் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சண்முகவடிவு உட்பட பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement