மதுரையில் ஏப்.2 முதல் ஏப்.6 வரை மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய மாநாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்.2 முதல் 6 வரை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதுரையில் நேற்று மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
இம்மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநாட்டிற்கு முதல் நாள் (ஏப்., 1) தமுக்கத்தில் வரலாற்றுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி துவங்கப்பட்டு தியாகிகளின் சுடர் சங்கமம் நடக்கிறது.
முதல் நாள் மாநாட்டில்மூத்த தலைவர் பிமான் பாசு கொடியேற்றுகிறார். தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்,இ.கம்யூ., பொதுச் செயலாளர் ராஜா, அகில இந்திய பா.பி., கட்சி பொதுச் செயலாளர் தேவராஜன் பங்கேற்கின்றனர்.
2ம் நாள் நிகழ்ச்சியில் முதல்வர்கள் ஸ்டாலின், பினராய் விஜயன், கர்நாடகா அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பங்கேற்கின்றனர். 3, 4ம் நாட்களில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். 5ம் நாள் ரிங் ரோட்டில் தொண்டர்கள் அணிவகுப்பு நடக்கிறது.
அன்று மாலை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பொதுக் கூட்டம் நடக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமான தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்படும் என்றார்.
எம்.பி. வெங்கடேசன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, நகர் செயலாளர்கணேசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.
மேலும்
-
ஏ.டி.எம்., கட்டணம் உயர்வால் ஏழைகளுக்கு கூடுதல் நெருக்கடி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு
-
ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை
-
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்