ஆன்லைன் சூதாட்டம்; புதிய சட்டம் இயற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 'ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.



மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்
-
பணத்தை எண்ணியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்!
-
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்; செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
-
அமெரிக்க அரசு துறையில் இருந்து விலகலா: எலான் மஸ்க் சூசகம்
-
விஷம் குடித்து ஜூவல்லரி கடை உரிமையாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை: ஆந்திராவில் சோகம்
-
சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு