பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கட்லாங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் எனக்கூறியுள்ளது. மேலும், இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து (3)
ராமகிருஷ்ணன் - ,
31 மார்,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
30 மார்,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
Advertisement
Advertisement