தந்தை மகனுக்காற்றும் உதவி; உதயநிதிக்கு பதிலாக மானியக்கோரிக்கையை முன் வைத்தார் முதல்வர்!

35

சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், அவரது துறை சார்ந்த மானியக்கோரிக்கையை சட்டசபையில் முன் வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.



தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு துறை அமைச்சரும் மானியக்கோரிக்கையை முன் வைத்து, எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.

இன்று 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி கவனிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி வரவில்லை.




முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''நேற்று துணை முதல்வர் உதயநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சட்டசபைக்கு வந்திருந்தார். இன்றைக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கி உள்ளனர். எனவே, நான் மானியக்கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன்,'' என்று கூறி, கோரிக்கையை முன் வைத்தார்.

Advertisement