சிறப்பான தேர்தல் நடைமுறை; இந்தியாவை டிரம்ப் பாராட்டியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்: சசி தரூர்

புதுடில்லி: இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை உதாரணமாக எடுத்து கொண்டது, நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தல் முறையை சீரமைப்பதற்கான நிர்வாக உத்தரவில், அதிபர் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டி இருந்தார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: அமெரிக்காவில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் ஓட்டளிக்க வரும் போது குடியுரிமை பெற்றவர் என்பதற்கு சுய சான்று அளித்தால் போதும்.
ஆனால் இந்தியாவில், நம்மிடம் வாக்காளர் பட்டியல் உள்ளது. அடையாள அட்டை இருக்கிறது. ஓட்டளிக்கும் நபர் உண்மையில் நமது குடிமகன் தான் என்பதை நிரூபனம் செய்வதற்கு தேவையான நடைமுறைகள் அனைத்தும் உள்ளன. இந்த நடைமுறை 1952ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. சிறப்பாகவும் செயல்படுகிறது.
இதற்கு உலகம் முழுவதும் நிறைய மரியாதை உள்ளது. இதனை அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களிடம் உதாரணம் காட்டி இருக்கிறார். அவரது நாடு சரியாக இல்லை என்றும் அவர் கூறுகிறார். இது நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
-
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: அட்டவணை வெளியீடு
-
ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு
-
சந்தேகத்திற்கிடமான ஆயுத உரிமம்: குஜராத்தில் 21 பேர் கைது; 25 ஆயுதங்கள் பறிமுதல்
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
-
டேபிள் டென்னிஸ்: மானவ் தோல்வி