இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தணும்; வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: வங்கதேச தேசிய தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரித்துள்ளார்.
இது குறித்து வங்க தேச இடை க்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ்க்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.


கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கதேச தினத்தை முன்னிட்டு, உங்களுக்கும், வங்கதேச மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிற்கும், வங்க தேசத்திற்கும் இடையே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.


பரஸ்பர உணர்திறனின் அடிப்படையில் உறவு கட்டமைக்கப்பட வேண்டும்.
வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையே வங்கதேச தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் தேசிய தினத்தை முன்னிட்டு, அரசு சார்பாகவும், இந்திய மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

Advertisement