மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா: அண்ணாமலை கேள்வி

சென்னை: ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்து முதல்வர் சிந்திப்பாரா'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உசிலம்பட்டி இன்ஸ்பெக்டரின் ஓட்டுநரான, முதல் நிலைக் காவலர் திரு. முத்துக்குமார், இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனது கட்சியினரின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு, தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்களும், உயிர்ப்பலிகளும்.
இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்து முதல்வர் சிந்திப்பாரா. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
pmsamy - ,
28 மார்,2025 - 07:56 Report Abuse

0
0
ராம் சென்னை - ,
28 மார்,2025 - 08:13Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
28 மார்,2025 - 07:14 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
28 மார்,2025 - 06:33 Report Abuse

0
0
Reply
Raj - Chennai,இந்தியா
28 மார்,2025 - 00:27 Report Abuse

0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
27 மார்,2025 - 23:48 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'டவுட்' தனபாலு
-
இன்று இனிதாக... (31.03.2025) காஞ்சிபுரம்
-
ராகுலிடம் புறமுதுகு காட்டி மனு கொடுத்த தலைவர்கள்!
-
கழிவுகளால் இப்போது பிரச்னை இல்லை!
-
ஏ.டி.எம்., கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கட்சி தலைவர்கள் கண்டனம்
-
அரசை விமர்சித்த வெளிநாட்டு மாணவர்கள்... வெளியேறுங்கள்!:விசாக்களை ரத்து செய்து டிரம்ப் அரசு அதிரடி; பதிவுக்கு 'லைக்' போட்டவர்களுக்கும் சிக்கல்
Advertisement
Advertisement