பணியில் டாக்டர் இல்லாததால் சோழிங்கநல்லுாரில் ஏமாற்றம்
சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, நெடுஞ்செழியன் தெருவில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு, காய்ச்சல், சளி, லேசான காயம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, தினமும் 120க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு செல்கின்றனர்.
ஆனால், இங்கு ஆறு மாதமாக டாக்டர் இல்லை. இதனால், செவிலியர்கள் நோயாளிகளிடம் நோய் குறித்து விசாரித்து, மாத்திரை வழங்குகின்றனர்.
சிலருக்கு, மாத்திரை அலர்ஜியால் ஊசி மருந்து கேட்கின்றனர். டாக்டர் இல்லாததால், ஊசி மருந்து செலுத்துவதில்லை. இதனால், நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை உள்ளது.
அதே வார்டில், பொன்னியம்மன் கோவில் தெருவில், நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளது. இங்கு செவிலியர், உதவியாளர் இல்லை.
இதனால், மருத்துவரை பார்த்த பின், அதிக நேரம் காத்திருந்து, அவரிடமே மருந்து வாங்க வேண்டியுள்ளது.
இரண்டு மையத்திலும் டாக்டர், செவிலியர் நியமிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.
மேலும்
-
25 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
-
அருங்காட்சியகமாக மாறுகிறது விக்டோரியா ஹால்: மேயர் பிரியா
-
மகள் காதலை எதிர்த்து தீக்குளிப்பு பெரும்பாக்கத்தில் தாய் உயிரிழப்பு
-
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
-
'பேட்'டால் முதியவரை தாக்கிய பெண்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு
-
பஸ் நிலையம் இல்லாத மாங்காடு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்