சலுகை கூடாது!

முஸ்லிம்களுக்கு சொத்துக்களில் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது போய், தற்போது அரசு ஒப்பந்தங்களில் இடஒதுக்கீடு வழங்குகின்றனர். இதனால், அரசியல்அமைப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மற்றவர்களை போலவே முஸ்லிம்களையும் சமமாக நடத்த வேண்டும். சிறப்பு சலுகை வழங்கக்கூடாது.
நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
எங்கும் எப்போதும் வரி!
பிறப்பு முதல் இறப்பு வரை மத்திய அரசு வரி வசூலிக்க முயற்சிக்கிறது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதில்லை. டிஜிட்டல் வங்கி பற்றி அடிக்கடி பேசுகின்றனர். சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆன பின்னும் பல கிராமப்புறங்களுக்கு வங்கி சேவை இல்லை; இணைய இணைப்பு இல்லை.
ராகவ் சத்தா, ராஜ்யசபா எம்.பி. ஆம் ஆத்மி
ஏன் பயப்படுகின்றனர்?
என்னை லோக்சபாவில் ஒருபோதும் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் எதற்கு பயப்படுகின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. ஜனநாயகத்தில், அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடம் உள்ளது. ஆனால், இங்கே எதிர்க்கட்சிக்கு அந்த வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச நேரம் கொடுப்பது ஒரு மரபு.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர், காங்கிரஸ்
மேலும்
-
25 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
-
அருங்காட்சியகமாக மாறுகிறது விக்டோரியா ஹால்: மேயர் பிரியா
-
மகள் காதலை எதிர்த்து தீக்குளிப்பு பெரும்பாக்கத்தில் தாய் உயிரிழப்பு
-
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
-
'பேட்'டால் முதியவரை தாக்கிய பெண்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு
-
பஸ் நிலையம் இல்லாத மாங்காடு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்