என்னை கொல்ல முயற்சி: அமைச்சர் மகன் அலறல்

பெங்களூரு: 'கூலிப்படை ஏவி என்னை கொல்ல முயற்சி நடந்தது' என்று, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான ராஜேந்திரா, டி.ஜி.பி.,யிடம் புகார் செய்து உள்ளார். ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, சி.ஐ.டி., முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளது.
கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, தன்னை ஒரு கும்பல் ஹனி டிராப் செய்ய முயன்றதாக, கடந்த 20ம் தேதி சட்டசபையில் கூறினார்.
ஹனி டிராப் செய்ய முயன்றதற்கு ஆதாரம் உள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் புகார் செய்வேன் என்றும் கூறி இருந்தார்.
ராஜண்ணாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான ராஜேந்திராவும், தன்னையும் ஹனி டிராப் செய்யும் முயற்சி நடந்தது என்றார். ஆறு நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பரமேஸ்வரிடம், ராஜண்ணா புகார் கொடுத்தார். ஆனால் ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.
கூலிப்படை
இந்நிலையில், பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று மதியம் ராஜண்ணா மகன் ராஜேந்திரா சென்றார். டி.ஜி.பி., அலோக் மோகனிடம் புகார் கொடுத்தார்.
ஹனி டிராப் குறித்து புகார் அளித்து இருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், ராஜேந்திரா மறுத்தார்.
அவர் கூறுகையில், ''ஹனி டிராப் குறித்து எந்த புகாரும் அளிக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி எனது மகளின் பிறந்தநாள்.
அதற்கு சாமியானா பந்தல் போட வந்த இருவர் என்னை தாக்க முயன்றனர். பின், எனது வீட்டில் இருந்து தப்பி சென்றனர்.
முதல் கட்ட விசாரணை
''கடந்த ஜனவரி மாதம் எனக்கு ஆடியோ உரையாடல் ஒன்று கிடைத்தது. அதில் என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவியது பற்றி பேசப்பட்டு இருந்தது.
''அப்போது தான் என்னை தாக்க முயன்ற இருவரும், என்னை கொலை செய்ய முயற்சி செய்தது தெரிந்தது. இதுகுறித்து டி.ஜி.பி.,யிடம் புகார் செய்து உள்ளேன்,'' என்றார்.
இதற்கிடையில் பெங்களூரு ஜெயமஹால் சாலையில் உள்ள, அமைச்சர் ராஜண்ணாவின் அரசு பங்களாவுக்கு நேற்று சி.ஐ.டி., அதிகாரிகள் சென்றனர்.
அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். இதனால் ஹனி டிராப் வழக்கை, சி.ஐ.டி.,யிடம், அரசு ஒப்படைத்து உள்ளது என்ற தகவல் வெளியானது.
ஆனால் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே, அரசு உத்தரவிட்டு இருப்பது தெரிந்து உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அரசு முடிவு செய்ய உள்ளது.
மேலும்
-
இரவில் திடீர் 'டேக் டைவர்சன்' மின் விளக்கு இல்லாததால் ஆபத்து
-
பெருங்களத்துார் 'டாஸ்மாக்' கடையால் தினசரி விபத்தில் சிக்கும் வாகனங்கள்
-
உலக தண்ணீர் தின விழிப்புணர்வு
-
மளிகை கடையில் திருடியவர் கைது
-
கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
-
தண்டுரை மார்க்கெட் பகுதியில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த கோரிக்கை