மளிகை கடையில் திருடியவர் கைது

எண்ணுார்,:எண்ணுார், அன்னை சிவகாமி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர், 40. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த, 7,500 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் திருடு போயிருந்தன.

இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில் திருட்டில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த வாசு, 24, என்பவரை, நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement