உலக தண்ணீர் தின விழிப்புணர்வு

கொரட்டூர்:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், நீர் ஓட்டம் நிகழ்வு நேற்று காலை நடந்தது. இந்த ஓட்டத்தை, ஆவடி போலீஸ் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
கொரட்டூர் ஏரியின் மேற்கு பகுதியில் துவங்கி, சீனிவாசபுரம் இரண்டாவது பிரதான சாலை, சிவலிங்கபுரம், சீயாத்தம்மன் கோவில் வழியாக, 4 கி.மீ., துாரம் சென்று, கொரட்டூர் ஏரியின் கிழக்கு பகுதியில், ஓட்டம் முடிவடைந்தது.
இதில், கொரட்டூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நீரின் அவசியம், சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து, முகப்பேர் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
Advertisement
Advertisement