கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது

காசிமேடு:சென்னை, ஆண்டாள் குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின், 40; கன்டெய்னர் லாரி ஓட்டுநர்.
இவர், சென்னை துறைமுகத்திற்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக, காசிமேடு மீன்பிடி துறைமுக சர்வீஸ் சாலையில் உள்ள கடல் முத்து மாரியம்மன் கோவில் அருகே, நேற்று லாரியில் சென்றார்.
அவரது வண்டியின் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர், தொடர்ந்து 'ஹாரன்' எழுப்பி கொண்டு வந்தார். உடனே ஸ்டாலின் லாரியை நிறுத்தி கீழே இறக்கிய போது, பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் 'தன் வண்டிக்கு வழி விடமாட்டாயா' எனக்கூறி, தகாத வார்த்தைகளால் பேசி, இரும்பு ராடால் ஸ்டாலின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ