உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம்

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி, தன்னாட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், சென்னையில் நேற்று ஒரு நாள், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு, தன்னாட்சி அமைப்பின் மாநில பொதுச் செயலர் சரவணன் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
சரவணன் கூறியதாவது:
தமிழகத்தில், 28 மாவட்டங்களில், கடந்த ஜனவரியில் நடத்த வேண்டிய, ஊரக உள்ளாட்சி தேர்தல், தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது. இதனால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 9,624 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட, 91,975 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து, மாநிலத் தேர்தல் கமிஷனரிடம் கேட்டபோது, '376 ஊராட்சிகளை, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்கிறார்.
ஆனால், வார்டு மறுவரையறையை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது. இதை மாநில அரசும், மாநிலத் தேர்தல் கமிஷனும் மீறக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
எனவே, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, அரசியலமைப்பு விதி மீறலாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மாநிலத் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ