விளாச்சேரிக்கு வி.ஏ.ஓ., வேண்டும்

திருநகர் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி ஊராட்சிக்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

விளாச்சேரியில் 13 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். தற்போது நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி கிராமங்களுக்கு ஒரே வி.ஏ.ஓ. உள்ளார். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே விளாச்சேரிக்கு வருகிறார்.

அவர் விளாச்சேரிக்கு வரும் நாட்களில்தான் விபரங்கள் கேட்கவோ, சான்றிதழ்கள் பெறவோ முடிகிறது. அவசர தேவைக்கு 5 கி.மீ., தொலைவில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு செல்வதற்கு அரசு பஸ் வசதியும் இல்லை. அதிக பணம் செலவிட்டு ஆட்டோக்களையும், டூவீலர்களையும் நாட வேண்டி உள்ளது.

வி.ஏ.ஓ., பணி நிமித்தமாக சென்றாலோ, விடுமுறை எடுத்தாலோ நாகமலை புதுக்கோட்டையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அங்கு வி.ஏ.ஓ.வை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் நாமலைக்கு செல்ல வேண்டும். விளாச்சேரிக்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement