விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் இன்பஒளி, செயலாளர் நாராயணன், தலைவர் தனஞ்செயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், கீழ்மாவிலங்கை கிராமத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து கோரிக்கை குறித்து தாசில்தார் சிவாவிடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement