அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

மரக்காணம் : மரக்காணம் அடுத்த ஆலத்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி, பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி மற்றும் மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு தேவையான 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மேல தாளங்களுடன் வாகனங்களில் எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

தலைமை ஆசிரியர் சுஜாதா வரவேற்றார். மாணவ, மாணவிகள் தனித்திறன் போட்டிகள் நடந்தது. முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement