அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை ஊராட்சியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் ரங்க சாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஜெயபால் பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலளார் குட்டியாண்டி, நகரஇளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் ஆனந்தன், பிரபாகரன், அசோகன், சிவக்குமார் பங்கேற்றனர்.

Advertisement