டாக்டர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

கடலுார்; கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை குழுமம் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்.
கடலுார் மஞ்சக்குப்பம் கிருஷ்ணா மருத்துவமனைகள் குழுமம் இயக்குனர் சீனியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று அவர் காலமானார். அவரது சொந்த ஊர் நெய்வேலி அடுத்த உய்யக்கொண்டான்ராவி. இவரது மனைவி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. மகன் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா. மருமகள் டாக்டர் ரம்யா. கடலுாரில் கடந்த 1968ம் ஆண்டு கிருஷ்ணா மருத்துவமனையை துவக்கி, குழந்தைகள் பிரிவு, இருதய பிரிவு, காசநோய், புற்றுநோய் பிரிவு பல பிரிவுகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கினார்.
எளிய முறையில் மருத்துவம் பார்த்து, பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்றவர். காலமான அவரது உடலுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், டாக்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.