குடிநீர் குழாய் பதிப்பு மும்முரம்

திருப்பூர்; சூசையாபுரம் பகுதியில் குடிநீர் வினியோக குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதுதிருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராயபுரம் மற்றும் சூசையாபுரம் உள்ளடக்கிய பகுதியில் குடிநீர் வழங்கும் பணிக்காக, 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டில் உள்ளது.
நான்காவது குடிநீர் திட்டத்தில் தற்போது புதிய தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக குழாய்கள் பதிக்க வேண்டிய பகுதிகளில் உள்ள ரோடுகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி, உடனுக்குடன் குழாய்கள் பதிக்கும் வகையில் பணிகள் திட்டமிட்டு நடந்து வருகிறது. வினியோக குழாய்கள் பதிப்பு பணி முடிந்த உடன் வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்