நல்ல கல்லுாரியில் படித்தால், நல்ல வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு

புதுச்சேரி : பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறனை வளர்த்துக்கொண்டால், மிகப்பெரிய பதவிகளுக்கு செல்லலாம் என, கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிராப்ளம் சால்விங் எபிலிட்டி ஸ்கில்ஸ் எனப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பான கேள்விகள் தான், ஐ.டி., - ஐ.ஏ.எஸ்.,- வங்கி தேர்வுகள், ஆர்.ஆர்.பி., தேர்வுகளில் கேட்கப்படுகிறது. மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இருக்க வேண்டுமென்றால், பிரச்னைகளுக்கு தீர்வுக்காணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களையே கம்பெனிகள் தேர்வு செய்வார்கள். படிக்கும்போதே பாடங்களை கவனிக்க வேண்டும். பணம் வேண்டும் என்றால் படிக்க வேண்டும். நல்ல கல்லுாரிகளில் படிக்க வேண்டும். கல்லுாரிகளுக்கு அட்மிஷன் போடுவதற்கு முன், நேரடியாக சென்று, அங்கு படிக்கும் மாணவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்படி நல்ல கல்லுாரியில் படித்தால், நல்ல வேலை கிடைக்கும். தற்போது, ஓவியம், பாடல், கலாசார நடனம், விளையாட்டு துறைகளை தேர்வு செய்து படித்தால் நல்ல வருமானம் கிடைக்கும். திறமை இருந்தால் அனைத்து துறைகளிலும் வளரலாம். வேளாண் படிப்புகள், கட்டட கலை, திட்டமிடுதல் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம்.
ராணுவம், கடற்படை, விமான படை உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம். ராணுவத்தில் பெண்கள் நர்சிங் கோர்ஸ் படிக்கலாம். பாதுகாப்பு துறை சார்ந்த படிப்புகளை படித்தால் அருமையான வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இதேபோன்று, கேட்ரிங், டிசைனிங் உள்ளிட்டவைகளையும் படிக்கலாம். மூன்றே கால் லட்சம் பேர் பிளஸ் 2 படித்துள்ளனர். கடும் போட்டியுள்ளது. ஒரு பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். அப்படி படித்தால் நிச்சயம் சாதிக்கலாம். நன்றாக படித்தால் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஆக முடியும்.வேலைவாய்ப்பு கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளின் ஹீரோ. ஆண்டுதோறும் தினமலர் நாளிதழ், மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து வருவதை பாராட்டுவோம்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்