சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement