கம்பராயப் பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் கட்ட பூமி பூஜை

கம்பம் : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் அன்னதான கூடம், கலையரங்கம் முன்பாக 'ஷெட்' ஒன்று கட்ட நேற்று காலை பூமி பூஜை நடந்தது.
இக்கோயில் வளாகத்தில் சமீபத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதில் ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
அமர்ந்து பார்க்கும் பக்தர்கள், மழை பெய்தால் நனைய வேண்டி உள்ளது. எனவே கலையரங்கத்திற்கு முன்பாக 'ஷெட்' ஒன்று அமைக்க ரூ.25 லட்சத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கி உள்ளது.
அதே போல இங்கு தினமும் அன்னதானம் சாப்பிடுகிறவர்கள் அமர்ந்து சாப்பிட அன்னதான கூடம் ஒன்று கட்டவும் ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முயற்சியில் இந்த நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளன. நேற்று காலை கோயில் வளாகத்தில் இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நதியா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், நகரச் செயலாளர்கள் பால்பாண்டி ராஜா, வீரபாண்டியன், சொக்க ராஜா, கவுன்சிலர் குருகுமரன், முன்னாள் செயலாளர் சிங் செல்லப் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.