முருகமலை மும்மூர்த்தி கோயில் மண்டல பூஜை
பெரியகுளம் : பெரியகுளம் முருகமலை நகர் ஈச்சமலை ரோடு பகுதியில் மும்மூர்த்தி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது.
இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணன், சரஸ்வதி, பிரம்ம தேவர் ஆகிய மும்மூர்த்திகள் கோயில், பரிவார தெய்வங்களுக்கு பிப்.10 ல் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று 48 வது நாள் நிறைவை முன்னிட்டு மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருகமலை நகர் ஊர் பொது மக்கள், மும்மூர்த்தி அறக்கட்டளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement