மராட்டியர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

திருப்பூர்; 'குடிபடுவா' என்ற சைத்ர மாதத்தின் முதல் நாள், பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வருகிறது. பிரம்மா, படைத்தல் தொழிலை இந்நாளில் துவங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்ட வருட பிறப்பு, சாலிவாகனன் என்ற மன்னரால் துவங்கப்பட்டது.
சத்ரபதி சிவாஜி பல தேசங்களை வெற்றி வாகை சூடி திரும்பிய போது, மராட்டிய மக்கள் வீடுகளில் காவி கொடியை கட்டி வரவேற்றனர். இந்நாளை, யுகாதி என்று மக்கள் கொண்டாடுகின்றனர். மராட்டிய மக்கள், 'குடிபடுவா' என்ற பெயரில், புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
திருப்பூரில் வசிக்கும் மராட்டிய மக்கள், நேற்று எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து கொண்டாடினர். ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலில் உள்ள, பாண்டுரங்கன், ருக்மாயி தேவியை வழிபட்டனர்.
கோவிலில், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. 'குடிபடுவா' கொம்பு வைத்து வழிபட்டனர்.
ஏற்பாடுகளை, ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மாயி சேவா டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட பாவுசர் சத்திரிய சங்கம், திருப்பூர் மாவட்ட மகிளா மண்டலி, திருப்பூர் யுவா சமாஜ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது