டாஸ்மாக்கில் முதல்வர் ஸ்டிக்கர்: பா.ஜ.,வினர் கைது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பா.ஜ., மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கரை கடையில் ஒட்டினர்.

தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நகரத் தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் பாண்டி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரதீப், நிர்வாகிகள் ஜெயராஜ், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பா.ஜ.,வினரை கைது செய்தனர்.

Advertisement