நள்ளிரவு தீ விபத்து; பியூட்டி பார்லர் நாசம்

திருப்பூர்; திருப்பூர் பி.என்., ரோட்டை சேர்ந்தவர் ஸ்வேதா, 34. தோட்டத்துப்பாளையத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். கடந்த, இரு ஆண்டுகள் முன், அண்ணா நகரை சேர்ந்த காயத்ரி, 25 என்பவருக்கு குத்தகைக்கு விட்டார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பியூட்டி பார்லரை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு, 1:30 மணியளவில் பியூட்டி பார்லரில் இருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு என்பதால் பணியில் தாமதம் ஏற்பட்டது. உள்ளே இருந்த விலை உயர்ந்த பர்னிச்சர், சேர், காஸ்டியூம் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்தது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்று அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது