குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி 10வது வார்டு தெற்கு தெரு விநாயகர் கோயில் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
இப்பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கும் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி சேடபட்டி திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. தற்போது அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் ஆகிறது. மற்ற நாட்களில் ஆங்காங்கு உள்ள போர்வெல், பொதுக் கிணறுகளில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை துவங்கியதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சக்கம்பட்டி 10 வது வார்டு விநாயகர் கோயில் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
வார்டு கவுன்சிலர் மீனாட்சி கூறியதாவது: கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் குழாய் உடைத்து குடிநீர் வீணாகிறது. ஏற்கனவே சரிசெய்த இடத்தில் தற்போது தண்ணீர் வீணாவது அதிகரித்துள்ளது. பேரூராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு இல்லை. தண்ணீர் வினியோகத்தில் பேரூராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது