காளியம்மன் கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை துவங்கியது. 2ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆண்டிபட்டி பெருமாள் கோயிலில் அக்னி வளர்த்து தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக முனியாண்டி கோயில், மீனாட்சி அம்மன் கோயில் வழியாக சென்று காளியம்மன் கோயிலில் நேர்த்திக் கடனை முடித்தனர். பொங்கல் விழாவின் நிறைவு நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொங்கல் விழாவில் ஆண்டிபட்டி, சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement