மாட்டுபட்டி அணை பகுதியின் கரையோரம் புலி நடமாட்டம்

மூணாறு; மாட்டுபட்டி அணையின் கரையோரம் முதன் முதலாக புலி நடமாடியதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு மாவட்ட சுற்றுலாதுறை, மின்வாரியம் ஆகியோர் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அதில் பயணிக்கும் பயணிகள் அணையின் கரையோரம் அவ்வப்போது நடமாடும் காட்டு மாடு, யானை, மான், மயில் உள்பட பல்வேறு வன விலங்குகளை பார்த்ததுண்டு. இந்நிலையில் அணையின் கரையோரம் நேற்று முன்தினம் முதன்முதலாக புலி நடமாடியது. அதனை படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து அதிசயித்ததுடன், அதனை அலைபேசியில் படம் பிடித்தனர்.
மாட்டுபட்டி அணையில் படகு சவாரி செய்ய தினமும் நுாற்றுக்கணக்கில் பயணிகள் வந்து செல்வர். அதன் எண்ணிக்கை சீசன் நேரங்களில் ஆயிரக்கணக்காக அதிகரிக்கும்.
ஆகவே புலி நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா
-
காற்றின் வேகம் குறைந்தது; வாழை இலை விலை சரிவு
-
சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-
பசுமையை பராமரிப்பதில் பங்களிக்கும் சேவா பாரதி --குடியிருப்பு நடுவே மரங்களால் வெயிலுக்கு இதம்
-
நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்
-
போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்