சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டு பூஜை நடந்தது. 11 நாட்கள் விழா நடக்கும். 4, 6 ம் நாள் திருவிழாவில் குத்து விளக்கு பூஜை, 8 ம் நாள் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும்.
சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வீதி உலா, 8ம் நாள் பொங்கல் திருவிழாவும், 9ம் நாள் கயர் குத்து திருவிழாவும், 10ம் நாள் தேரோட்டமும் நடக்கும். இதே போல் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது