காற்றின் வேகம் குறைந்தது; வாழை இலை விலை சரிவு
திருப்பூர்; காற்றின் வேகம் குறைந்துள்ளதால், வாழை இலை வரத்து அதிகமாகி, விலை குறைந்துள்ளது.
வழக்கமாக, தலைவாழை எனப்படும் பெரிய இலை, பத்து முதல், 14 ரூபாய்க்கும், சாதாரண இலை, ஆறு முதல், எட்டு ரூபாய்க்கும் விற்கப்படும். உழவர் சந்தை, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கான வாழை இலை வரத்து அதிகமானதால், கடந்த சில தினங்களாக பெரிய தலைவாழை இலை, ஒன்பது ரூபாய்; சாதாரண இலை, நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இலை வியாபாரிகள் கூறுகையில், ''முகூர்த்த சீசன் முடிந்துள்ளது; இலை விற்பனை சற்று குறைவு. வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளதால், காற்றின் வேகம் இல்லை. மாலை, இரவு நேரங்களில் கூட காற்று குறைவாக இருப்பதால், இலைகளில் சேதம் தவிர்க்கப்படுகிறது. விற்பனை குறைந்துள்ள நிலையில், வரத்தும் அதிகமாகியுள்ளதால், விலை சற்று குறைந்துள்ளது. சித்திரைக்கனி, பவுர்ணமி நாட்களில் விற்பனையை பொறுத்து விலை இருக்கும்,' என்றனர்.
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது