போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் தெருவிளக்கு வெளிச்சம் போதாதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

திண்டுக்கல் - - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் சேவுகப்பெருமாள் கோயில் முதல் வேட்டையன்பட்டி வரை 3 கி.மீ., தூரத்திற்கு பல இடங்களில் தெருவிளக்கு வெளிச்சம் பற்றாக்குறையாக உள்ளது.

இச்சாலை சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லைக்குள் உள்ளது. நான்கு ரோடு சந்திப்பை ஒட்டிய சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே முறையான தெருவிளக்கு வசதி உள்ளது.

சேவுகப்பெருமாள் கோயில், ரத வீதி ராமர் கோயில் சுந்தரம் நகர் ஆர்ச் முதல் வேட்டையன்பட்டி வரை சில தெருவிளக்குகள் இருந்தும் வாகன ஓட்டிகளுக்கு பயன் தரும் வகையில் போதவில்லை.

இதனால் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அது சேவுகப்பெருமாள் கோயில் முதல் வேட்டையன்பட்டி வரை குறிப்பிட்ட தூர இடைவெளியில் அதிக வெளிச்சம் தரக்கூடிய உயர்ரக தெருவிளக்குகளை அமைக்க வேண்டும்.

Advertisement