பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்

புதுச்சேரி; 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரியில் நாளை 29ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிகழ்ச்சி, புதுச்சேரி சித்தன்குடி பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. இங்கு, அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் பெறலாம்.

என்ன படிக்கலாம்



பிளஸ் 2வுக்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வி திருவிழாவில், கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள், தொழில் துறை வல்லுநர்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

மாணவர்களின் சிறந்த உயர் கல்விக்கு அடித்தளமிடும் இந்நிகழ்ச்சியில் எதிர்காலத்தை ஆளப்போகும் துறைகள், உடனடி வேலை வழங்கும் படிப்புகள் எவை என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

அட்மிஷன் நடைமுறை



உயர்கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பினை அள்ளித் தரும் துறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.

மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்துவித சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

நிபுணர்கள் ஆலோசனை



சிவில் சர்வீசஸ், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு துறைகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.

மெட்டாவர்ஸ், டேட்டா சயின்ஸ், ஏ.ஆர்.வி.ஆர். அறிவியல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் ஆப் வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் சாதிக்க வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

நுழைவு தேர்வு



மேலும், நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், கிளாட், நாட்டா, கேட் போன்ற நுழைவு தேர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்து விளக்கப்படும்.

அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்.சி., - ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அரங்கங்கள்



நிகழ்ச்சியில் பொறியியல், கலை, மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியர், பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.

அசத்தலான பரிசுகள்



கருத்தரங்க அமர்வுகளில், மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் என அசத்தலான பரிசுகள் வழங்கப்படும்.

எதிர்கால படிப்புகள்



ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது. இதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்தரங்கில் விளக்கப்பட உள்ளது.

நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் எனும் தலைப்பில் ராணுவ விஞ்ஞானி தில்லிபாபு, நவீன தொழில்நுட்பங்களின் எதிர்காலம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அஸ்வின், வேலைவாய்ப்புகள் குறித்து சோகோ மனிதவள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.

கேன்டின் வசதி

மாணவர் மற்றும் பெற்றோர் வசதிக்காக அரங்கில் கேன்டின் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணைந்து வழங்குவோர்

நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட் அக்கவுண்ட் ஆப் இந்தியா, ருசி பால் நிறுவனம், எஸ். மீடியா சேனல், அக்குவாகிரீன் குடிநீர், 92.7 பிக் எப்.எம். ஆகியவை இணைந்து வழங்குகின்றன.



இலவச முன்பதிவிற்கு

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.

Advertisement