நோன்பு திறப்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜமாத் நிர்வாகிகள் அ.தி.மு.க., நிர்வாகிகளை வரவேற்றனர்.

பின்பு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அவைத் தலைவர் முத்துமணி, துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் கருமலையான், நிர்வாகிகள், ஜமாத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement