இலவச வேட்டி சேலை

சிவகாசி : சிவகாசியில் இந்திய தேசிய லீக் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தாதாபியான், வர்த்தகப்பிரிவு அணி செயலாளர் மீரான் மைதின் முன்னிலை வகித்தனர் மாநகர பொருளாளர் முகமது காசிம் இப்ராஹிம் வரவேற்றார். வி.சி.,கட்சி மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ், இந்திய தேசிய லீக் சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், தி.மு.க., சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் மாநகர செயலாளர் முத்து விலாசா நன்றி கூறினார்.

Advertisement