போலீஸ் செய்திகள் விருதுநகர்

கிராவல் மண் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: பூவாணி அருகே கண்மாயில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கிராவல் மண்ணை திருட்டுத்தனமாக அள்ளி கொண்டு செல்ல முயன்ற டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. வாகனங்களை டவுன் எஸ்.ஐ. ராமநாதன் பறிமுதல் செய்தார். டிரைவர்கள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கல்லுாரி மாணவர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி ரோட்டில் ராமகிருஷ்ணபுரம் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு டூவீலர்கள் மோதி கொண்டதில் மேட்டு முள்ளி குளத்தைச் சேர்ந்த கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கோபி கண்ணன் 20, உயிரிழந்தார். மற்றொரு டூவீலரில் வந்த சாமிநத்தத்தை சேர்ந்த 15, 16 வயதுடைய 3 பேர் காயமடைந்தனர். மல்லி போலீசார் விசாரித்தனர்.

டூவீலர்கள் மோதல்; முதியவர் பலி

சாத்துார்: ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். ஆலங்குளம் கங்கர் செவலை சேர்ந்தவர் ராமசாமி 62. நேற்று முன்தினம் இரவு 6:00 மணிக்கு பகுதியில் உள்ள டீக்கடைக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) டீ சாப்பிட சென்றார். எதிரில் சுண்டங்குளத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜன் 42, ஓட்டி வந்த டூவீலர்(ஹெல்மெட் அணியவில்லை) நேருக்கு நேர் மோதியது. ராமசாமி தலையில் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement