பள்ளி ஆண்டு விழா

சிவகாசி : சிவகாசி அருகே கிருஷ்ணம நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துமாரி குத்து விளக்கு ஏற்றினார். தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து விஜய பாண்டியன் தலைமை வகித்தார்.

முன்னாள் ஊராட்சி தலைவர் சித்ராதேவி முன்னிலை வகித்தார். சிவகாசி வட்டார கல்வி அலுவலர் அரவிந்தன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேற்பார்வையாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுனர் கற்பகம் வழக்கறிஞர் நாராயணசாமி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement